மகேந்திரன் (இந்திரன்) வழிபட்ட தலம். அதனால் 'மயேந்திரபள்ளி' என்று அழைக்கப்படுகிறது. ஒரு கால பூஜை மட்டும் நடைபெறுகிறது. (நேரம் காலை 11-12)
மூலவர் 'திருமேனியழகர்' என்னும் திருநாமத்துடன், அழகிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பிகை 'வடிவாம்பிகை' என்னும் திருநாமத்துடன் காட்சி அளிக்கின்றாள்.
பிரம்மா, சூரியன், சந்திரன் ஆகியோர் வழிபட்ட தலம்.
பங்குனி மாதம் சூரியனின் கதிர்கள் மூலவர் மீது விழும் சூரிய பூஜை நடைபெறுகிறது.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகப் பெருமானைத் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 8 மணி முதல் 12 வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 வரையிலும் திறந்திருக்கும். தொடர்புக்கு : குருசாமி குருக்கள் - 04364-292309 |